உண்மையில் இவர் யார் ? இவர் எப்படிபட்டவர்?

இவர் குணாதிசயங்கள் என்ன?

வார்த்தை = இயேசு                     ஜீவன் = இயேசு                  மெய்யான ஒளி = இயேசு                 ஞானம் = இயேசு

உண் மையில் இவர் யார் ? இவர் எப்படிபட்டவர்?

ஆதியிலே வார்த்தை( இயேசு ) இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.

அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.

அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.

அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று. உலகமோ அவரை அறியவில்லை.அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஞானமாகிய  நான்( இயேசு )  விவேகத்தோடே வாசம்பண்ணி, நல்யுக்தியான அறிவுகளைக் கண்டடைகிறேன்.

ஆலோசனையும் மெய்ஞ்ஞானமும் என்னுடையவைகள்; நானே புத்தி, வல்லமை என்னுடையது.என்னாலே ராஜாக்கள் அரசாளுகிறார்கள், பிரபுக்கள் நீதிசெலுத்துகிறார்கள்.என்னாலே அதிகாரிகளும், பிரபுக்களும், பூமியிலுள்ள சகல நியாயாதிபதிகளும் ஆளுகைசெய்து வருகிறார்கள்.என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்.ஐசுவரியமும், கனமும், நிலையான பொருளும், நீதியும் என்னிடத்தில் உண்டு.

என்னைச் சிநேகிக்கிறவர்கள் மெய்ப்பொருளைச் சுதந்தரிக்கும்படிக்கும், அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும்படிக்கும்,அவர்களை நீதியின் வழியிலும், நியாயபாதைகளுக்குள்ளும் நடத்துகிறேன்.

கர்த்தர் (பிதா ) தமது கிரியைகளுக்குமுன் பூர்வமுதல் என்னைத்( இயேசு ) தமது வழியின் ஆதியாகக் கொண்டிருந்தார்.பூமி உண்டாகுமுன்னும், ஆதிமுதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம்பண்ணப்பட்டேன்.ஆழங்களும், ஜலம் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகுமுன்னே நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும், குன்றுகள் உண்டாவதற்கு முன்னும்,அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும் நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.அவர் வானங்களைப் படைக்கையில் நான் அங்கே இருந்தேன்; அவர் சமுத்திர விலாசத்தை வட்டணிக்கையிலும்,உயரத்தில் மேகங்களை ஸ்தாபித்து, சமுத்திரத்தின் ஊற்றுகளை அடைத்து வைக்கையிலும்,சமுத்திர ஜலம் தன் கரையை விட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்துகையிலும்,நான் அவர் அருகே செல்லப் பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன்.அவருடைய பூவுலகத்தில் சந்தோஷப்பட்டு மனுமக்களுடனே மகிழ்ந்துகொண்டிருந்தேன்.

ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என் வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள்.நீங்கள் புத்தியைக் கேட்டு, ஞானமடையுங்கள்; அதை விட்டு விலகாதிருங்கள்.

என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான்.என்னைக் கண்டடைகிறவன் ஜீவனைக் கண்டடைகிறான்; கர்த்தரிடத்தில்தயவையும் பெறுவான்.எனக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனோ, தன் ஆத்துமாவைச் சேதப்படுத்துகிறான், என்னை வெறுக்கிறவர்கள் யாவரும் மரணத்தை விரும்புகிறவர்கள் என்று சொல்லுகிறது.

 

இவர் குணாதிசயங்கள் என்ன?

இவரது குணாதிசயங்களில் சிலவற்றை நாம் இந்த பகுதியில் தியானிப்போம்.

முதலாவதாக பாதுகாக்கிற தேவன் : 

ஆதியிலே வார்த்தையாய் இருந்து, பின்பு கிருபையினாலும்  சத்தியதினாலும் நிறைந்தவராய் மாம்சத்திலே மனிதனாக வந்து இந்த பூமியிலே வாசம்பண்ணின தேவனாகிய இயேசு நம்மை பாதுகாக்கிறவராய்  இருக்கிறார்.

                         “சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்;

                கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்.” – சங் .4:8

என்று சங்கீதத்தில் வாசிக்கிறோம் .மேலும்

                        ” இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை.” -சங்.121:4

என்றும் பார்க்கிறோம்.

இரண்டாவதாக வல்லமையுள்ள தேவன் :

வல்லமையுள்ள தேவன் நமக்கு உதவிச் செய்கிறவராய் இருக்கிறார்.

                          “எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்.

                          வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.” – சங். 121:1-2

                          “நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் நாளில் என் சத்துருக்கள் பின்னிட்டுத் திரும்புவார்கள்; தேவன்                                                       என் பட்சத்தில் இருக்கிறார் என்பதை அறிவேன்.”

                          “தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; கர்த்தரைமுன்னிட்டு அவருடைய                                                  வார்த்தையைப் புகழுவேன்.”

                           “தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்னசெய்வான்?” – சங். 56:9-11

                           “பஞ்சத்தில் அவர்களை உயிரோடேகாக்கவும், கர்த்தருடைய கண் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கிறது.”                          சங்.33:19

                          “நம்முடைய சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடையநாமத்தில் உள்ளது.”                                                சங்.124:8

இப்படியாக நாம் வேதத்தில் வாசிக்கிறோம். எனவே நமக்கு உண்மையான உதவி நம் தேவனிடமிருந்து மட்டும் தான் வருகிறது என்பதை நாம் அறிந்துக்கொள்ளவேண்டும்.

மூன்றாவதாக  அன்புள்ள தேவன்:

                           “இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.                                      சங்.147:3

நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம்.II கொரி.1:3 

நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்.அப்.10:38 இயேசு குருடரின் கண்களை திறந்தார், செவிடரை கேட்கச்செய்தார், முடவர்களை நடக்கச்செய்தார், பேய்களை விரட்டினர், பிசாசுகளை துரத்தினார், மரித்தவர்களை உயிரோடு எழுப்பினார், மரித்த லாஸுருவுக்காக கண்ணீர்விட்டார், வியாதியஸ்தர்கள் எல்லாரையும் குணமாக்கினார், ஜனங்களை திருப்தியாக போஷித்தார்,

இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன். ஆமென்.யோவான்.21:25

இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.யோவான்.20:31

நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்.சங்.46:10

நீங்கள் இயேசுவை அறிந்திருக்கிறீர்களா? இவர் மிகவும் அன்பானவர். உண்மையில் உங்களை நேசிக்கிறார், இவரை அறிந்துகொள்ள பரிசுத்த  வேதாகமத்தை வாசியுங்கள், இவர் சொற்படி நடவுங்கள், சர்வவல்லமையுள்ள தேவனாகிய, அன்பே உருவான இயேசுகிறிஸ்து தாமே உங்களை ஆசிர்வதித்து பாதுகாப்பாராக, ஆமென்

எழுதியவர் : Pastor.D.தேவஇரக்கம் KCA Chennai.