ஊழியங்கள்
இச்சபையின் மூலம் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டு அநேகர் இரட்சிக்கப்பட்டு ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு வருகிறார்கள், இந்திய தேசம் இரட்சகர் இயேசுவை அறிந்து கொள்ள திறப்பிலே நின்று ஜெபங்கள் ஏறெடுக்கப்பட்டு வருகிறது, சிறுவர்கள்,, வாலிபர்கள், பெண்கள், குடும்ப தலைவர்கள், குடும்ப தலைவிகள் என பலருக்கும் தாங்கள் வெற்றி வாழ்வு வாழ வேண்டிய அறிவுரைகள் மற்றும் கிறிஸ்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.


சிறுவர்களுக்கென ஞாயிறு பள்ளி , விடுமுறை வேதாகம வகுப்பு, நடத்தப்பட்டு வருகிறது. வாலிபர்களுக்கு என்று சிறப்பு ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு , வாலிபர்கள் கிறிஸ்துவின் சேனை வீரர்களாய் மாற்றப்பட ஊக்குவிக்கப் படுகிறார்கள் , பெண்களுக்கு பிரத்தியேகமாக கூட்டங்கள் இரட்சிக்கப்பட்ட நம் சபையின் சகோதரிகளால் நடத்தப்படுகிறது . தேவனை அறியாத அநேக பெண்கள் கிறிஸ்துவின் அன்பை பெற்று ஆசீர்வதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் விதவைகள், வயதானவர்கள், திக்கற்ற பிள்ளைகள், என தேவைகளுள்ள மக்களுக்கு சபையால் முடிந்த உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

நம் இந்திய தேசம் இரட்சகர் இயேசுவை அறிந்து ஆசிர்வதிக்கப்பவும், சபைகள் எல்லாம் தூய்மையாகி சாட்சியாக மாறவும், கரை திரையற்ற பரிசுத்த மணவாட்டியாக கர்த்தராகிய இயேசுவின் வருகையில் (சபை எடுத்துக்கொள்ள படுத்தலில்) பங்கு பெற ,சபைக்கு வருகிறவர்கள் இரட்ச்சிக்கப்படவும், இரட்ச்சிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் ஆசிர்வதிக்கப்படவும் ஜெபிப்பதற்க்காக ஜெபக்குழுக்கள் எஸ்தர் ஜெபக்குழு & தானியேல் ஜெபக்குழு(since 2000) ஏற்படுத்தப்பட்டு ஜெபவீரர்கள் ஜெபித்து வருகிறார்கள், தேவா சித்தம் இச்சபையில் நிறைவேறுவதாக, தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்.

எங்கள் விலாசம் :
கண்ணம்பாளையம் கிறிஸ்தவ சபை
Pastor.D.தேவ இரக்கம்
186 A, சர்ச் தெரு,
கண்ணம்பாளையம், செங்குன்றம்,
சென்னை – 600052,
தமிழ் நாடு , இந்தியா .
தொலைபேசி : +91 9444 83 20 63
இ-மெயில் : [email protected]