திரு.D.தேவ இரக்கம்

 

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள நரசிங்கனூர் எனும் கிராமத்தில்  1954இல்  திரு A.தானியேல் – திருமதி பத்மாவதி என்பவர்களுக்கு மூத்த மகனாக பிறந்தார் .சொந்த ஊரில் ஆரம்ப கல்வி  பயின்று  அதனை தொடர்ந்து மேற்படிப்பிற்காக 1968 யில் தனது தாய்மாமன் சகோ.G. ஜான் சௌந்தர நாதன் (மீச்சூர்  கிறிஸ்துவின் சபை ) அவர்களால் சென்னைக்கு  வந்தார். 

திரு &திருமதி  வில்லியம் – எத்தேல் ஜூலிக்

திரு &திருமதி  வில்லியம் – எத்தேல் ஜூலிக்  அவர்கள் மூலமாய்  சென்னையில் உள்ள எண்ணூரில் கிறிஸ்து நகர் அமைப்பை மையமாக வைத்து நடத்தப் பட்டு வந்த மாணவர் விடுதியில் தங்கி P.U.C வரை( தியாகராய கல்லூரி ) படித்துவிட்டு சொந்த ஊர் திரும்பினார். 

மூலக்கடை கிறிஸ்துவின் சபை

பின்னர் அதே விடுதியில் படித்துவரும், தனக்கு சீனியருமான  Dr.ஞானசிகாமணி MA.,Phd. (போதகர் – மூலக்கடை  கிறிஸ்துவின் சபை & வேதாகம இலக்கிய ஊழியத்தின் நிறுவனர் ) அவர்களால், அவருடைய நற்செய்தி அச்சகத்திற்கு அச்சுக்கோர்ப்பு (compositor ) வேளைக்கு சரியான ஆள் இல்லை என்று சொல்லி , பாஸ்டர் V.ஞான முத்து (எண்ணூர் நேர் நகர் கிறிஸ்துவின் சபை )அவர்களைக்கொண்டு  சொந்த ஊரிலிருந்த சகோ.தேவ இரக்கம் மீண்டும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார் ,

இவ்வாறாக  அச்சகத்தில் அச்சுக்கோப்பவராகவும், மூலக்கடை கிறிஸ்துவின் சபையில் உதவிக்காரராகவும் இருந்து Pastor .Dr.ஞான சிகாமணி அவர்களால் கிறிஸ்துவ ஆவிக்குரிய காரியங்களிலும், கிறிஸ்துவ உபதேசத்திலும் நன்கு போதிக்கப்பட்டார் 

போதகராக சகோ தேவ இரக்கம் 

பின்னர் 1993 இல் கர்த்தருடைய சித்தப்படி இவர் போதகராக நியமிக்கப்பட்டு Dr.ஞான சிகாமணி  அவர்களால் கண்ணம்பாளையம் எனும் இக்கிராமத்திற்கு குடும்பமாக அனுப்பி வைக்கப்பட்டார் , அந்நாள் முதல் போதகர் D.தேவ இரக்கம் தனது குடும்பத்தினரோடு  கர்த்தருடைய மகத்தான பணியை செய்து வருகிறார். இவர் ஆழமான சத்தியங்களையும், எவரும் மிக எளிதில் விளங்கிக்கொள்ளும் வகையில் உவமைகளோடு  போதிக்கக்கூடியவர். 

இவருக்காகவும் , இவர் மூலமாய் நடக்கும் சபை ஊழியங்களுக்காகவும் , இவரது குடும்பத்துக்காகவும் ஜெபித்துக்கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென் .

எங்கள் விலாசம் 

கண்ணம்பாளையம் கிறிஸ்தவ சபை 

Pastor.D.தேவ இரக்கம் 

186 A, சர்ச் தெரு,
கண்ணம்பாளையம், செங்குன்றம், 
சென்னை  – 600052, 
தமிழ் நாடு , இந்தியா .

தொலைபேசி  : +91 9444 83 20 63
இ-மெயில் : [email protected] 

www kcachurch.org