கண்ணம்பாளையம் கிறிஸ்தவ சபையின் வரலாறு 

1983 இல்  – I.G.S (Indian Gospel Service ) மற்றும் மூலக்கடை கிறிஸ்துவின் சபை  மூலம் கிராம ஊழியம் கண்ணம்பாளையத்தில்  நடைப்பெற்றது, பாஸ்டர்.A .ஜெயராஜ் அவர்களுடன் அநேக ஊழியர்கள் பாஸ்டர் ராபின்சன் , பாஸ்டர் கிறிஸ்டி போன்ற பல தேவமனிதர்கள் இவ்வூழியத்தில் தங்களை ஈடுபடுத்தி கொண்டனர். பல எதிர்புகள் மத்தியில் சுவிசேஷம் (Gospel நற்செய்தி) கண்ணம்பாளையம் கிராமத்தில் நுழைத்தது. 1984 இல்  I.G.S நிர்வாகிகளான Dr. V.ஞானசிகாமணி  மற்றும் A.M.P ஈஸ்டர் ராஜ் அவர்களால் திருச்சபைக்காக சொந்தமாக இடம் வாங்கப்பட்டது. சகோ. கோவிந்தராஜ் (எ) சாமுவேல் (கண்ணம்பாளையம் ) இதற்கு உதவியாக இருந்தார். 

1986 இல் முதலில்  தென்னங்கீற்று  கொட்டகை போடப்பட்டு  ஆராதனைகள் நடத்தப்பட்டது, பாஸ்டர் P. ஜீவானந்தம்  அவர்கள் ஊழியராக இருந்து சபையை நடத்தி வந்தார், 1993 இல் IGS நிறுவனரான மிஷ்னரி Bro.ஜான் டிம்ஸ்  (Missionary Bro. John Timms, IGS Founder – Australia) அவர்கள் மூலம்  கொட்டகை பிரிக்கப்பட்டு  ஒற்றைக்கால் சுவர் வைத்து சதுரை ஓடு கட்டிடமானது 1993 இல் சகோ.MT. தீமோத்தியு (IGS Trustee ,India)  அவர்கள் தலைமையில் கட்டப்பட்டது. அதுமுதல்  Pastor.D.தேவ இரக்கம் அவர்கள் இச்சபையின்  போதகராக இருந்து கிறிஸ்துவின் பணியை  நிறை வேற்றி வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர்  IGS = RIMES  என்று பெயர் மாற்றப்பட்டது. பின்னர் அந்த அந்த  ஊழியர்களே  தங்களது சபையை  நிர்வகித்து கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தி  RIMES  தனது உதவிகளை சில சபைகளுக்கு  நிறுத்தி கொண்டது. இந்நிலையில்  அநேக தேவைகள், உபத்திரவங்கள், இன்னல்கள், சோதனைகள் இருந்தப்போதிலும் போதகர் தேவ இரக்கம் அவர்களின் ஜெபத்தாலும் சபையாரின் ஒத்துழைப்பாலும் இச்சபையானது கர்த்தருடைய பெரிதான கிருபையால் தொடர்ந்து நடைப்பற்று வளர்ச்சிக்கண்டு வருகிறது. தேவனுக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்.

எங்கள் விலாசம் 

கண்ணம்பாளையம் கிறிஸ்தவ சபை 

Pastor.D.தேவ இரக்கம் 

186 A, சர்ச் தெரு,
கண்ணம்பாளையம், செங்குன்றம், 
சென்னை  – 600052, 
தமிழ் நாடு , இந்தியா .

தொலைபேசி  : +91 9444 83 20 63
இ-மெயில் : [email protected] 

www kcachurch.org